டோல்கேட்டில் சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
தண்ணீர் பந்தல் திறப்பு
திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதி பிரதான சந்திப்பு பகுதியாகும். இங்கிருந்து லால்குடி, அரியலூர், ஜெயங்கொண்டம், சிதம்பரம், பெரம்பலூர், விழுப்புரம்,சென்னை, முசிறி,நாமக்கல்,சேலம், பெங்களூர் ,துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பிரதான சந்திப்பு பகுதியாக உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைக்கின்றது. பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஏ ஐ டி யூ சி தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை இன்று திறந்து வைத்தனர்.
இதில் பொது மக்களுக்கு குளிர்ச்சி தரும் நீர் மோர், வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசணி, உள்ளிட்டவைகள் வழங்கினார். இந்நிகழ்வில் திமுகவின் வடக்கு மாவட்ட தலைவர் அம்பிகாபதி மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே பி எ செந்தில் தரைக்கடை சிறுகடை வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகிருஷ்ணன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஏ ஐ டி யு சி நிர்வாகிகள் பிரபாகரன் சந்தோஷ் விசிக ஒன்றிய செயலாளர் ஏகவலைவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக ஏ ஐ டி யு சி நிர்வாகி முகம்மது நன்றி கூறினார்.