சேரன் கலை அறிவியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்க பரிசு

காங்கேயம் அருகே சேரன் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த திட்டுப்பாறையில் செயல்பட்டு வரும் சேரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் சார்பில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு துவங்கப்பட்ட திட்டமானது இந்த ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றது.

கடந்த ஆண்டு 25 மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தற்போது திட்டமானது விரிவுபடுத்தப்பட்டு 100 பள்ளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு துவக்க விழா நடைபெற்றது. மேலும் இந்த திட்டமானது அடுத்த ஆண்டு 500 பள்ளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார் மேலும் இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். சேரன் காலேஜ் ஆப் டெக்னாலஜி அண்மையில் அரபிக்கப்பட்டதாகவும் அதில் புதிய இரண்டு படைப்பிரிவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பள்ளியில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு 100% காலர்ஷிப் டியூசன் தொகையாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் இக்கல்லூரியில் படித்துக்கொண்டே பணிபுரியாவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் மாணவ மாணவிகள் அரசு பணியான குரூப் 1 & குரூப் 2 யுபிஎஸ்சி,டின்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு படிக்க வசதியாக சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து இக்கல்லூரியிலேயே இணைந்து பயிற்சிகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

Tags

Next Story