கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை

ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி 

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் உறுப்பினர்களுக்கு 2022- 2023 ஆண்டிற்கான ஊக்கத்தொகையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சரவணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஆவின் ஏஜிஎம் ரங்கசாமி, மற்றும் மேலாளர் காளியப்பன், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பாரதி ராமஜெயம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி பி அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் மங்கலம் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு 618 பயனாளிகளுக்கு ரூ 9,63,111 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகையை வழங்கினார். அப்போது அவர் பேசிதாவது. இந்த ஆவின் பால் பண்ணையில் பால் ஊற்றும் பயனளிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இந்த ஆவின் பால் பண்ணையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு அரசாங்கத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பாலின் விலை மக்களுக்கு முழுமையாக கிடைக்கிறது. அதேபோல் அவர்களுக்கு வழங்கப்படும். ஊக்கத் தொகை எந்த ஒரு இடைத்தரகர் இல்லாமல் முழுமையாக உண்மையான பயனாளிளுக்கு சென்றடைகிறது. அதேபோல் இந்த பால் பண்ணையில் பால் ஊற்றி வரும் பயனாளிகள் அனைவரும் இன்னும் அதிக அளவு கறவை மாடுகளை வளர்த்து அதன் மூலம் அதிக அளவு பால் ஊற்றி பால் பண்ணையில் மிகப்பெரிய அளவிற்கு தமிழக அரசுக்கு பால் உற்பத்தி செய்யும் மாவட்டமாக இந்த திருவண்ணாமலை மாவட்டம் இருக்க வேண்டும். மேலும் இந்த பால் பண்ணையில் இன்னும் பல உறுப்பினர்கள் அதிக அளவு ஊக்கத் தொகை பெற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, துணை சேர்மன் உஷாராணி சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் சகாதேவன், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் செயலாளர் பரணி, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story