புதுகையில் அறிவுசார் மையம் தொடக்கம்

புதுகையில் அறிவுசார் மையம்  தொடக்கம்
X

அறிவுசார் மையம் தொடக்கம்

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கட்டப்பட்ட அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை நகராட்சி சார்பில் காந்தி பூங்கா அருகே ரூபாய் 1.94 கோடியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு நூலகத்தை பார்வையிட்டனர். தரை மற்றும் முதல் தலங்களுடன் 4500 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 11 கணினிகளும் 40 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் 2280 நூல்களைக் கொண்ட நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் உள்ளன. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, நகர்மன்ற தலைவர் செ. திலகவதி, ஆணையர் சியாமளா, மூத்த வழக்கறிஞர் கே கே செல்லபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ ராசு. கவிதைபித்தன் உள்ளிட்டோரம் கலந்து கொண்டனர்.

Tags

Next Story