மலையோர பகுதிகளில் தொடர் மழை

மலையோர பகுதிகளில் தொடர் மழை

மழை 

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பேச்சிப்பாறை,திருநந்திக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் இதமான சூழல் நிலவி வருகிறது.

குமரிமாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி, வதைத்து வந்தது. காலை நேரங்களில் குளித்து விட்டு குளியலறையை விட்டு வெளியே வந்ததும், வியர்வையால் குளிக்கும் அளவுக்கு வெயிலின் வெப்பம் இருந்தது. மின்விசிறியோ, குளிர்சாதன வசதியோ சில நிமிடங்கள் செயல்படாவிட்டாலும் மக்கள் படும்பாட்டுக்கு அளவே இல்லை என்கிற அளவுக்கு கோடை வெப்பம் அனலாய் தகித்தது.இந்த நிலையில் கத்திரி வெயிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.ஏற்கனவே தவித்து வந்த மக்களுக்கு இந்த கத்திரி வெயில் கூடுதலாக மக்களை வாட்டி எடுக்கிறது.

இடையிடையே பெய்து வரும் மழைதான் மக்களுக்கு சற்று ஆறுதலை தந்து கொண்டிருக்கிறது.அதே சமயத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, புத்தன் அணை உள்ளிட்ட பகுதிகளிலும், களியல், திற்பரப்பு, திருநந்திக்கரை, குலசேகரம், சுருளகோடு, பொன்மனை, தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, பாலமோர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து 3 நாட்களாக பெய்தது.இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று பமாலை அணை மற்றும் மலையோர பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்குமேலாக மிதமான மழை பெய்தது.

Tags

Next Story