தொடர் மழை எதிரொலி - கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை : மாவட்ட நிர்வாகம்

தொடர் மழை எதிரொலி - கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை : மாவட்ட நிர்வாகம்

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

இனிவரும் நாட்களில் பெய்யும் மழையின் அளவினைப் பொறுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்தார்.

நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொல்லிமலைப் பகுதியின் சுற்றுலா பகுதிகளான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய பகுதிகளில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும், (மே-22) மற்றும் இன்று (மே-23) ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறையிடமிருந்து வானிலை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

மேற்படி சுற்றுலா பகுதிகளான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேற்காணும் சுற்றுலா தலங்களுக்கு வருகை புரிய வேண்டாம் என நாமக்கல் வனக்கோட்டம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இனிவரும் நாட்களில் பெய்யும் மழையின் அளவினைப் பொறுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அறிவுறித்துள்ளார்.

Tags

Next Story