தொடர் மழையால் செங்கல் தயாரிப்பு பணிகள் பாதிப்பு

தொடர் மழையால் செங்கல் தயாரிப்பு பணிகள் பாதிப்பு

மூடப்பட்டுள்ள செங்கல் சூளை

பருவம் தவறி பெய்து வரும் மழையால் வானூர் அருகே செங்கல் தயாரிப்பு பணிகள் பாதிப்படைந்துள்ளது. மேலும் செங்கற்கள் மழையில் நனைந்து சூளை உரிமையாளர்களுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம், பெரிய பாபு சமுத்திரம், தாண்டவமூர்த்தி குப்பம், கலித்திரம் பட்டு ஆகிய பகு திகளில் அதிகளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இதனை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். வழக் கமாக நவம்பர், டிசம்பர் மாதம் மழை ஓய்ந்த பிறகு ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி இந்த ஆண்டும் ஜனவரி 1-ந்தேதி முதல் செங்கல் அறுக்கும் பணி தொடங்கப்பட்டது, இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக அறுத்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கிலான கற்கள் மழையில் நனைந்து சேதமாகின. மேலும் தொடர்ந்து செங்கல் அறுக்க முடியாத சூழ்நிலையும் உள்ளது. பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story