தொடர் மழை: விளைச்சல் பாதிப்பு

தொடர் மழை:  விளைச்சல் பாதிப்பு

தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுரைக்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.10 க்கு விற்பனையானது.

தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுரைக்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.10க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம்: தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுரைக்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.10 க்கு விற்பனையானது.ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இப்பகுதியில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக சுரைக்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வரத்து குறைந்து விலை அதிகரிக்கிறது.டிசம்பர் தொடக்கத்திலிருந்து விலை படிப்படியாக அதிகரித்து நேற்று ரூ.10க்கு விற்றது.கடந்த மாதம் சுரைக்காயை விற்க முடியாமல் தவித்து வந்த நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

Tags

Next Story