தொடர் மழையால் தேரூர் பெரிய குளம் நிரம்பியது

தொடர் மழையால் தேரூர் பெரிய குளம் நிரம்பியது

தொடர் மழையால் தேரூர் பெரிய குளம் நிரம்பியது

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் குளம் தொடர்ந்து பெய்த மழையால் குளம் நிரம்பியது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ளது தேரூர் குளம் . இந்த குளம் மாவட்டத்தில் மிகப் பெரிய குளம் ஆகும். இதன் மொத்த பரப்பளவு சுமார் 2 கிலோ மீட்டர் ஆகும். பறவைகள் சரணாலயமாக விளங்கி வருவதால் இந்த குளம் பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர் மழை பெய்து வடுவதால் மாவட்டத்தில் உள்ள அணைகள் குளங்கள் நிரம்பி உள்ளன.

இந்த நிலையில் தேரூர் குளமும் முழு கொள்ளளவை எட்டி, குளத்தில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக குளத்தின் மதகுகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும் தேரூர், அக்கரை உள்ளிட்ட கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story