மலையோர பகுதியில் தொடர் மழை - அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

மலையோர பகுதியில் தொடர் மழை - அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.

பைல் படம் 

பேச்சிப்பாறை,பெருஞ்சாணி உள்ளிட்ட மலையோர பகுதிகளில் பெய்யும் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இருப்பினும் மலையோர பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, திருவட்டார், குலசேகரம் உள்ளிட்ட மலையோரம் கிராமங்களில் மாலை கனமழை பெய்தது.

மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.04 அடியாகும்.அணைக்கு 318 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர் மட்டம் 47.55 அடியாகும். அணைக்கு 43 கன அடி தண்ணீர் வரத்து இருந்ததுஅணையில் இருந்து 21 கன அடிதண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 9.28 அடியும், சிற்றார்-2ல் 9.28 அடியும் நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 16.10 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 18.37 அடியும், முக்கடல் அணையில் 5.80 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாவட்டத்தில் காலை வரை அதிக பட்சமாக பேச்சிப்பாறையில் 36.2 மி.மீ மழை பெய்திருந்தது.

Tags

Next Story