குமரியில் தொடர் மழை - ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பாதிப்பு
ரப்பர் மரம்
குமரி மாவட்டத்தில் முக்கியமான தொழில் ரப்பர் பால் வெட்டும் தொழில் ஆகும். இங்கு இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் அதிக அளவு ரப்பர் ஷீட்டுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரப்பர் ஷிட்டுகள் முதல் தரமானது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். மேலும் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் ரப்பர் மரங்கள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசு தோட்டங்களில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்கள். தற்போது வட கிழக்கு பருவமழை ஒரு மாதமாக பெய்து வருகிறது. இதனால் பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு தொழில் எதுவும் தெரியாமல் இந்த தொழிலை மட்டும் நம்பி இருக்கும் தோட்ட தொழி லாளர்கள், தங்கள் அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கு பயிரிடப்பட்டு வந்த ரப்பர் ஷிட்டுகள் ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.118-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. மழையினால் பால் வெட்டும் தொழில் பெரிய அளவில் பாதிக்கப் படட்டுள்ளது. எனவே அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story