மலையோர பகுதியில் தொடர் மழை: தடுப்பணையில் செல்ல தடை

மலையோர பகுதியில் தொடர் மழை: தடுப்பணையில் செல்ல தடை

தடுப்பணை செல்ல தடை

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை வழி பொதுமக்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டதுடன் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்த தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்து ஆற்றுநீர் மாசடைந்து காணப்பட்டது.

இதனால் தண்ணீர் இன்றி தவித்த பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் மாசடைந்த தண்ணீரில் குளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு வந்ததுடன் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் தேங்காய் பட்டணம் பகுதியில் இருந்து கடல் நீர் ஆற்று நீருடன் கலந்து தாமிரபரணி ஆற்றில்,

உள்ள பல கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிப்பை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் குமரி மலையோர பகுதிகளில் நான்கு நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் பேச்சிப்பாறை, ஆம்பாடி, சிவலோகம்,சிற்றார், களியல், கடையால், திற்பரப்பு உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து கன மழை பெய்ததால் வரண்டு காணப்பட்ட நீர் ஓடைகளில் தண்ணீர் வர துவங்கியதால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் தண்ணீர் குறைந்து காணப்பட்ட தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட துவங்கியது. இந்த தண்ணீர் இன்று குழித்துறை தடுப்பணை வழியாக நிரம்பி வழியும் நிலையில் குழித்துறை தபால் நிலையம் பகுதியில் இருந்து வெட்டுவந்நி பகுதிக்கு பொதுமக்கள் செல்ல பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story