தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.


தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை இதைத்தொடர்ந்து மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டக்கூடிய நிலையில் உள்ளதையடுத்து, அணைக்கு வரக்கூடிய நீர்வ ரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.பேச்சிபாறை அணை நீர்மட்டம் 45 அடியை நெருங்குவதால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உபரி நீரை வெளியேற்ற வாய்ப்புள்ளது. எனவே தாமிரபரணி ஆறு மற்றும் கோதை ஆற்றின் கரையோர் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story