குமரியில் வாலிபரை தாக்கிய சம்பவம் : 4 பேர் கைது

X
4 பேர் கைது
நாகர்கோவிலில் வாலிபரை தாக்கிய சம்பவம் : 4 பேர் கைது. மேலும் 2 நபர்களை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதான சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சுமார் எட்டு மணியில் இந்த டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் வருவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கி, சட்டையை கிழித்து அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் உள்ளவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வேகமாக பதிவிட்டனர். சம்பவம் அறிந்ததும் கோட்டார் மற்றும் நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலுக்குள்ளான வாலிபர் கோணம், வட்டகரை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சம்மந்தபட்டவர்கள் குறித்த அடையாளம் வீடியோ காட்சி மூலம் தனிப்படை போலீசார் கண்டுபிடித்து, நாகர்கோவில் ராமன்புதூர் சார்ந்த நவீன்குமார், அஜெய்கண்ணன், சஜ்ஜெய்பிரபு மற்றும் ஆதிஷ் ஆகிய 4 நபர்களை அதிரடியாக தனிபடையினர் கைது செய்தனர். மேலும் 2 நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
