செய்யூர் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வருமான வரி சோதனை
செய்யூர் அருகே தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வருமான வரி சோதனை. 4 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் வருமானவரி சோதனையால் செய்யூரில் பரபரப்பு.
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரிய வெண்மணி என்கிற கிராமத்தில், நாகமலை பகுதியில் 3 வருடத்திற்கு மேல் இயங்கி வரும் தனியார் கல்குவாரி மற்றும் மண் அறைக்கும் கிரஷரில் சுமார் எட்டு பேர் குழு கொண்ட வருமான வரி துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான இந்த கல் குவாரியில் நடைபெற்று வரும் சோதனையால் செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரப்பரப்பான சூழல் நிலவி வருகிறது..
Next Story