அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக வருமான வரி சோதனை
அமைச்சர் எ.வ.வேலு
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.சென்னை, திருவண்ணாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு மற்றும் கல்லூரியிலும் இன்று 5-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது.இது தவிர காசாகிராண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று 5-வது நாளாக சோதனை நடந்தது.கடந்த வெள்ளிக்கிழமை 3-ந் தேதி முதல் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இதுவரை நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் குறித்து எந்த தகவலையும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடர் சோதனை நடந்து வருவது திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story