இசட் வளைவு சாலையால் விபத்து அதிகரிப்பு - சாலையை அகலப்படுத்த கோரிக்கை

பாபநாசம் நகரில் இசட் வளைவு சாலையால் விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் சாலை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம் நகரம் மூச்சு முட்டும் அளவுக்கு போக்குவரத்து நெருக்கடியால் சிக்கி தவிக்கிறது .இங்குள்ள சாலை இசட் வளைவு குறுகிய சாலையாக இருப்பதாலும் எதிரும் புதிரும் வாகனங்கள் வருவதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது பாபநாசம் கிழக்கில் திருப்பாலைத்துறை பள்ளிவாசல் வாணிய தெரு கடை தெரு போலீஸ் குடை தங்கமுத்து மாரியம்மன் திருக்கோவில் பழைய பஸ் ஸ்டாண்ட் அரசு மருத்துவமனை பகுதி என இந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்துள்ளது.

கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி செல்லும் பஸ்கள் லாரிகள் டிராக்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என தினமும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன சுமார் அதிக மக்கள் தொகை வசிக்கும் பகுதியாக பாபநாசம் உள்ளது எனவே இந்த குறுகிய சாலை வழியாகத்தான் பஸ்களும் மனிதர்களும் கடந்து செல்ல வேண்டும் பாபநாசம் பகுதி சாலை இசட் வளைவு சாலையாக இருப்பதாலும் எதிரும் புதிருமாக வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெருக்கடி மூச்சு முட்டும் அளவிற்கு உள்ளது நடந்து செல்பவர்கள் பறந்து செல்ல கற்றுக் கொண்டால் தான் கடை தெருவை கடந்து போகலாம் என்கிற நிலை உள்ளது .

இந்நிலையில் பழைய பஸ் நிலையத்தில் மருத்துவர்கள் மருந்து கடைகள் பழ கடைகள் வங்கிகள் பல உள்ளன இவைகள் முன்பாக இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் நிற்கின்றன இதனால் சாலையில் நெருக்கடி ஏற்படுகிறது இங்கு போக்குவரத்து நெருக்கடியால் தினமும் விபத்து மரணம் பேருந்துகள் தேக்கம் போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன இதில் காவல் துறையில் பதிவாகாத விபத்து காயமடைவோர் பட்டியல் என போக்குவரத்து நெருக்கடி மக்களை மிரட்டுகிறது .

இதற்கு தீர்வு சாலையை அகலப்படுத்தவேண்டும் ஒரு வழிப்பாதையை நடைமுறைப்படுத்த வேண்டும் பாபநாசத்திற்கு போக்குவரத்து துறை காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் பாபநாசம் புளியமரத்தடி போலீஸ் குடை திருப்பாலைத்துறை பெரியார் சிலை வளைவு புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் போக்குவரத்து காவலர்கள் நிறுத்தப்பட வேண்டும் உடனடியாக போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க பாபநாசம் பகுதியில் ஒரு வழி பாதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாபநாசம் பகுதி வாழ் மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

Tags

Next Story