முடிச்சூர் சாலையில் மாடுகள் தொல்லை அதிகரிப்பு
சாலையில் நிற்கும் மாடுகள்
முடிச்சூர்-மணிமங்கலம் நெடுஞ்சாலையில் இரவில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர்-மணிமங்கலம் நெடுஞ்சாலையில் இரவில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். முடிச்சூர்—மணிமங்கலம் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தாம்பரம், பல்லாவரம், மண்ணிவாக்கம், படப்பை, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.
இந்த சாலையில், மணிமங்கலம் பகுதியில் இரவு நேரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. மேலும், சாலையை மறித்து படுத்து கொள்வதால் மாடுகளால் அடிக்கடி விபத்தும், போக்குவரத்தி நெரிசலும் ஏற்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் மிக கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து கோ சாலையில் அடைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்."
Tags
Next Story