மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,367 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,367 கன அடியாக அதிகரித்துள்ளது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.39 அடியில் இருந்து 67.70 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 30.75 டிஎம்சியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2,128 கன அடியில் இருந்து 3,367 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் 7.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Tags
Next Story