மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்வரத்து அதிகரிப்பு
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 66 கன அடியாக அதிகரிப்பு.
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 54 கன அடியிலிருந்து 66 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
கடந்த 3 நாட்களாக 54 கன அடியாக நீர் வரத்து இன்று 66 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 64.89 அடியாகவும், நீர் இருப்பு 28.46 டி.எம்.சி.யாகவும் உள்ளது.குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Next Story