வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விலை அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் சமீப காலமாக அதிகரித்த வரும் வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது
தர்மபுரி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இங்கு சாகுபடி செய்யப்படும் எலுமிச்சை தர்மபுரி மாவட்டத்தின் தேவைக்கு போக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது இந்த சூழலில் தற்போது தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு காய்கறிகள் விலை உயர்ந்து வரும் சூழலில், கடந்த மாதம் ஒரு கிலோ எலுமிச்சை 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் படிப்படியாக அதிகரித்து கடந்த 1ம் தேதி 100க்கும், இன்று ஜூன் 22 காலை உழவர் சந்தையில் 1 கிலோ எலுமிச்சை 145 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் எலுமிச்சை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story