தை அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் விற்பனை அதிகரிப்பு

தை அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் விற்பனை அதிகரிப்பு

காய்கறி விற்பனை அதிகரிப்பு

தை அமாவாசையை முன்னிட்டு சேலம் உழவர் சந்தையில் 1கோடிக்கு காய்கறிகள்,பழங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளான.

ஆண்டு தோறும் தை அமாவாசை தினத்தில் இந்துக்கள் தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அன்றைய தினத்தில் விரதம் இருப்பார்கள் என்பதால் அசைவம் உண்பதை தவிர்த்து விடுவார்கள். இதன்காரணமாக இதுபோன்ற நாட்களில் காய்கறிகள் விற்பனை அதிகரிக்கும். அதன்படி தை அமாவாசையையொட்டி நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வழக்கத்தை விட காய்கறிகள், பழங்கள், பூக்கள் அதிகளவில் விற்பனை ஆகின.

இதில் சூரமங்கலம் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் ரூ.23 லட்சத்து 66 ஆயிரத்து 380-க்கு விற்பனை ஆகின. அதே போல், தாதகாப்பட்டியில் ரூ.16 லட்சத்து 31 ஆயிரத்து 150, அஸ்தம்பட்டியில் ரூ.9 லட்சத்து 41 ஆயிரத்து 652, அம்மாபேட்டையில் ரூ.8 லட்சத்து 88 ஆயிரத்து 440, ஆத்தூரில் ரூ.20 லட்சத்து 52 ஆயிரத்து 831, இளம்பிள்ளையில் ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 80-க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை ஆகின.

மேலும் எடப்பாடியில் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 402, ஜலகண்டாபுரத்தில் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 425, மேட்டூரில் ரூ.6 லட்சத்து 21 ஆயிரத்து 940, ஆட்டையாம்பட்டியில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்து 410, தம்மம்பட்டியில் ரூ.6 லட்சத்து 52 ஆயிரத்து 650 என மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் தை அமாவாசையையொட்டி ரூ.1 கோடியே 9 லட்சத்து 29 ஆயிரத்து 350-க்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை ஆகியுள்ளன.

Tags

Next Story