மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு

மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு

விற்பனைக்கு வந்த மீன்கள் 

மீன்பிடி தடை காலத்தையொட்டி கடல் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதால் திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்தது.

மீன் இனப்பெருக்கம் காலத்தில் கடல்களில் மீன் பிடித்தடை காலம் விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் கடல்களில் மீன் பிடிக்க தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது. இன்னும் 20 நாட்கள் தடைக்காலம் உள்ளது. இதனால் கடல் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இவனை அடுத்து மீன்களின் விலை கிலோவிற்கு ரூபாய் 50 முதல் ரூபாய் 200 வரை உயர்ந்துள்ளது. திண்டுக்கல்லில் கடல் மீன்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சோலைஹால் ரோடு, என்.ஜி.ஓ காலனி, தெற்கு ரத வீதி, ஆர்.எம். காலனி உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக மீன் கடைகள் உள்ளன. இன்று கடல் மீன்கள் வரத்து குறைவு எதிரொலியால் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் சிறியது ரூ.700 பெரிய வஞ்சிரம் ரூபாய் 1200க்கும் விற்கப்பட்டது. பாறை ரூபாய் 550, விலைமீன் ரூபாய் 500, சங்கரா ரூபாய் 450, ஊலா ரூபாய் 450, இறால் ரூபாய் 500, ப்ளூ நண்டு ரூபாய் 650, முரல் ரூபாய் 450, செம்மீன் ரூபாய் 400க்கும் விற்கப்பட்டது. தடைக்காலம் அமலில் உள்ளதால் பெரிய படகுகளுக்கு அனுமதி இல்லை. அடுத்த மாதம் தடைக்காலம் முடிந்த பிறகு மீன்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story