கர்நாடகாவில் இருந்து சேலத்துக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் இருந்து சேலத்துக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் இருந்து வந்த தக்காளி 

சேலம் ஆற்றோர மார்க்கெட், வ உ சி மார்க்கெட், பால் மார்க்கெட் ஆகிய இடங்களுக்கு சேலம் மாவட்டம் மற்றுமின்றி கர்நாடகா, ஆந்திராவில் இருந்து காய்கறிகள் வரத்து அதிக அளவில் உள்ளது. தக்காளி பொருத்தமட்டில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் இருந்து அதிகப்படியான அளவு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதேவேளையில் கர்நாடகா மாநிலம் கோலார் மற்றும் பெங்களூர் பகுதியில் இருந்து சேலத்திற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. சேலம் ஆற்றோர மார்க்கெட்டில் காலை 2,500 க்கும் அதிகமான கிரேடுகளில் சுமார் 70 டன் தக்காளி விற்பனைக்கு வந்தது. இதனை மொத்த வியாபாரிகள் தரம் வாரியாக பிரித்து விற்பனை செய்து வந்தனர். 25 கிலோ எடை கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.300 முதல் 700 வரை விற்கப்பட்டது. இதனை சிறு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். இதனால் மார்க்கெட்டில் தக்காளி விற்பனை களை கட்டியிருந்தது. இங்கிருந்து வாங்கி செல்லப்படும் தக்காளியை ஒரு கிலோ ரூ.10 முதல் 25 வரை வியாபாரிகள் விற்பனை செய்வதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story