கொடைக்கானலில் வார விடுமுறையில் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானலில் சீசன் காலம் துவங்கியதை தொடர்ந்தும் ,வார விடுமுறையை முன்னிட்டும் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெற்று குவிந்து வருகின்றனர், இதனை தொடர்ந்து தமிழகமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
கொடைக்கானலில் காலை முதலே மிதமான வெப்பத்துடன் குளுமையான கால நிலை நிலவுவதால்,இந்த இதமான சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலாப்பயணிகள் இயற்கை அழகினை கண்டு ரசித்தனர்,மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள லட்சக்கணக்கான மலர்களை கண்டு ரசித்தும்,நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொண்டு சுற்றுலாப்பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்,.
சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தலங்களிலும், நகர்ப்பகுதிகளிலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.