கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்கள் 

கொடைக்கானலில் இ-பாஸ் முறை அமுல்படுத்திய பிறகு,வார விடுமுறையான நேற்று சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிதுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த செவ்வாய் கிழமை முதல் இ-பாஸ் நடைமுறை அமுல்படுத்தியதை தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது, இந்நிலையில் வார விடுமுறையான நேற்று தமிழகமட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது.

இதனையடுத்து உகார்த்தேநகர், சீனிவாசபுரம்,மூஞ்சிக்கல், ஏரிச்சாலை,அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து,சாலையில் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஊர்ந்தப்படி சென்று வருகின்றனர்,மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடம்,மற்றும் மாற்று சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே வேண்டுக்கோளும் எழுந்துள்ளது, கடந்த சில நினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி,தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது.

Tags

Next Story