காய்கறி விலை உயர்வு.!

காய்கறி விலை உயர்வு.!
X

காய்கறிகளின் விலை உயர்வு 

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 தினங்களை உள்ளே நிலையில் காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை கடுமையாக உயர துவங்கி உள்ளது. தக்காளி கிலோ 25 ரூபாய்க்கும் பல்லாரி கிலோ 70 ரூபாய் வரையும் சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய் வரையும் பீன்ஸ் கிலோ 120 வரைக்கும் அவரைக்காய் கிலோ 100 ரூபாய் வரையும் கத்திரிக்காய் வெண்டைக்காய் கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனை தீபாவளி பண்டிகைக்கு இன்னும் பத்து தினங்களே உள்ள நிலையில் தூத்துக்குடி காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை தற்போது உயர துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விற்பனையான தக்காளி பாவூர்சத்திரம் பகுதியிலிருந்து தக்காளி வரத்து குறைவு காரணமாக கிலோ 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோன்று கிலோ முப்பது ரூபாய்க்கு விற்பனையான பல்லாரி நாசிக் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து வரத்து முற்றிலுமாக நின்று உள்ளதால் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இதேபோன்று சின்ன வெங்காயம் கிலோ 100 ரூபாய்க்கும் அவரைக்காய் கிலோ 100 ரூபாய்க்கும் பீன்ஸ் கிலோ 120 ரூபாய்க்கும் வெண்டைக்காய் மற்றும் கத்திரிக்காய் கிலோ 60 முதல் 70 ரூபாய் வரையும் கேரட் கிலோ 40 ரூபாய் வரையும் உருளைக்கிழங்கு கிலோ 40 முதல் 50 ரூபாய் வரையும் இஞ்சி பழையது கிலோ 320 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது இந்த விலை உயர்வு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்த வியாபாரிகள் இதன் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்

Tags

Next Story