காய்கறி விலை உயர்வு

காய்கறி விலை உயர்வு

காய்கறி விலை உயர்வு 

தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தூத்துக்குடி காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து காய்கறிகளையும் வாங்கி சூரிய பகவானுக்கு படைத்து நன்றி தெரிவிக்கும் வகையில் வைத்து வழிபடுவர். இதையோட்டி தூத்துக்குடி உள்ள காமராஜர் காய்கறி சந்தையில் பொருட்களை வாங்க காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்த காரணமாக காய்கறி வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

இதன்காரணமாக காய்கறிகளின் விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. தக்காளி கிலோ 40 ரூபாய் வரையும் கத்திரிக்காய் கிலோ 150 ரூபாய் பீன்ஸ் மற்றும் அவரைக்காய் கிலோ 140 முதல் 160 ரூபாய் வரையும் அதிகபட்சமாக முருங்கைக்காய் கிலோ 200 ரூபாய் வரையும் சீனரைக்காய் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கேரட் கிலோ 60 ரூபாய் வெண்டைக்காய் கிலோ 60 ரூபாய் இஞ்சி கிலோ 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது‌ இதேபோன்று உருளைக்கிழங்கு சேப்பக்கிழங்கு கருணைக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகள் கிலோ 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் அனைத்து காய்கறிகளையும் வாங்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

Tags

Next Story