மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து 1,399 கன அடியாக அதிகரித்துள்ளது
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,399 கன அடியாக உயர்வு. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,387 கன அடியில் இருந்து இன்று 1,399 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.83 அடியில் இருந்து 70.93 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 33.50 டிஎம்சியாக உள்ளது.குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story