ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 1500 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1500 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சிறிது வழக்கம் இந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பணிகள் குவிந்தனர். மேலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நீர்வரத்து சரிந்து காணப்பட்டு வந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் தொடர்ந்து மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கணக்கிட்டு வருகின்றனர்.

Tags

Next Story