அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்வரத்து

அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்வரத்து

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,250 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக ,தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 150 கன அடியாக நீடித்து வந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

அணைக்கு வரும் நீரின் அளவு விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்தால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதன்படி கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக வினாடிக்கு 150 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 556 கன அடியாகயும் ,இன்று 1,250 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.77 அடியாகவும், நீர் இருப்பு 33.36 டி.எம்.சி,யாக உள்ளது.

Tags

Next Story