திருப்பூரில் வந்தே பாரத் ரயிலுக்கு அதிகரிக்கும் பயணிகள் வரவேற்பு

திருப்பூரில் வந்தே பாரத் ரயிலுக்கு அதிகரிக்கும் பயணிகள் வரவேற்பு

வந்தே பாரத் ரயில்

திருப்பூரில் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.

கோவையிலிருந்து சென்னைக்கு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. காலை 6 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்றடையும். புதன் தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கட்டணமாக ரூ. 1,215 முதல் ரூ. 2 ,310 வரை வசதிக்கேற்ப வசூலிக்கப்படுகிறது.

ரெயில் இயக்கம் தொடங்கியபோது வந்தே பாரத் ரெயிலின் வேகம் 120 கிலோ மீட்டராக இருந்தது. தற்போது வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்படுவதாக தெரிகிறது.

இருப்பினும் வந்தே பாரத் ரெயிலின் முன்பதிவு ஆகஸ்டு மாதம் இறுதிவரை முடிந்துவிட்டது. வேகம் குறைக்கப்பட்டாலும் ரெயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

Tags

Next Story