பேராவூரணி ஜேசிஐ நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா
நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
பேராவூரணி ஜேசிஐ நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர வர்த்தகர் கழக அலுவலகத்தில், வியாழக்கிழமை மாலை ஜேசிஐ பேராவூரணி சென்ட்ரல் நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கௌரவ விருந்தினராக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், கௌரவ விருந்தினராக மண்டல தலைவர் ஆர்.ஆர்.அன்பு தனபாலன் கலந்து கொண்டு பேசினர். நிர்வாகிகள் வழக்கறிஞர் ஜி.வெங்கடேசன், கே.நல்லதம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினர்.
இதில் தலைவராக ச.பார்த்திபன், செயலாளராக இரா.விமல் ராஜ், பொருளாளராக இரா. செந்தில் குமார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
Next Story