காலவரையற்ற வேலை நிறுத்தம் - வெறிச்சோடிய கலெக்டர் அலுவலகம்
வெறிச்சோடிய அலுவலகம்
விழுப்புரம் மாவட்டத்தில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்க வேண்டும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் அனைத்து தாலுகாளிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை தாச்தா பணியிடங்களை உடனே ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கடந்த 2022-ம் தேதி முதல் பணிகளை புறக்கணித்து அரசு அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர் .
இந்நிலையில் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்திய போதிலும் கோரிக்கையை நிறைவேற்றாத அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர் அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றி வரும் தமிழ்நாடு வரவேற்புரை அலுவலர் சங்கத்தை சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்டோர் நேற்று பணிக்கு செல்லாமல் கோரிக்கையை வலியுறுத்தி காலை வரவேற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டம் காரணமாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வருவாய் துறை அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், தேசிய நில எடுப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலங்களில் வருவாய் துறை அலுவலர்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.