10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம்

நாமக்கல்லில் 10 அம்சக்கோரிக்கைகளை  வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் மாநில மையம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் இச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் காத்திருப்பு மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார்.மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் பிரகாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராணி, உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். அதில், மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றப்படாததால் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்கு முன்பாக அதற்கான அரசாணை வெளியிட வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி இறக்க பாதுகாப்பு அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும். இத்துறை பணியாளர்களின் பணித் தன்மைகளை கருத்தில் கொண்டு அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். புதிய வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story