இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்

 ஆலோசனைக் கூட்டம்

சிவகங்கையில் இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
சிவகங்கையில் இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் பேசுகையில், வரும் தேர்தல் நாடாளுமன்ற வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல. நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய தேர்தல் என்றும், அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்டி சாமி கும்பிட தடை போடுவார்கள். நமது பழக்க வழக்கங்களுக்கு தடை போட்டு விட்டு, சமஸ்கிருத, மேல் தட்டு முறைகளில் தான் வழிபாடு நடத்த வேண்டும் என கூறுவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் கூடாமல், செலவு கூடிவிட்டது. இது தான் மோடி அரசின் அவல நிலை என்ற அவர், இந்தியாவில் உள்ள 140 கோடி பேரும் வரி கட்டுகின்றனர். இந்தியாவில் வரி கட்டாத ஆட்களே கிடையாது. ஆனால், தமிழக மக்கள் கட்டும் வரி பணம், வடமாநிலத்தில் செலவு செய்யப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். தமிழகத்திற்கு அதிக நிதி கிடைக்க வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். முதலமைச்சர்களை கைது செய்து பயமுறுத்துகின்ற அசாதாரண சூழல் நிலவுகிறது. தமிழக அரசிற்கு பாதுகாப்பு வேண்டுமென்றால், அதனை சார்ந்துள்ள அரசு மத்தியில் அமைய வேண்டும். தமிழக அரசின் 4 முத்தான திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் பேசினார்

Tags

Next Story