தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்தியா கூட்டணியினர்
தேர்தல் பிரச்சாரம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய முன்பாக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவுக்கு தேர்தல் ஆணையம் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கியிருந்த நிலையில் அதனை அறிமுகப்படுத்தும் விழா புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா திமுக இலக்கிய அணி மாநில தலைவர் கவிச்சுடர் கவிதை பித்தன் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விடுதலைச் சிறுத்தைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அக்கட்சியின் தொண்டர்கள் கையில் தேர்தல் ஆணையம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கிய தீப்பெட்டி சின்னத்தை கையில் ஏந்தியவாறு தீப்பெட்டி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு கோஷங்கள் எழுப்பிய வண்ணம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளே ஊர்வலமாக சென்று அங்கிருந்த வியாபாரிகளிடமும், பஸ் பயணிகளிடமும் தீப் பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினர். இந்நிகழ்வில் திமுக கூட்டணி கட்சி சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்