இந்தியா கூட்டணி  செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு !

இந்தியா கூட்டணி  செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு !

செயல்வீரர்கள் கூட்டம்

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் குளச்சல் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் திங்கள்நகரில் நேற்று நடந்தது. பிரின்ஸ் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி "இந்தியா" கூட்டணியின் குளச்சல் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் திங்கள்நகரில் நேற்று நடந்தது. பிரின்ஸ் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், ராஜேஷ்குமார் எம்எல்ஏ, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் ராமசுப்பு, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் உட்பட கூட்டணி நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் எம்பி கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் விஜய்வசந்த் எம்பி-ஐ சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இந்தியா கூட்டணி கட்சியினர் உழைப்பது.

பூத் கமிட்டியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பது, பாஜகவின் பொய் பரப்புரைகளை முறியடிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிஎஸ்பி சந்திரா நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story