INDIA கூட்டணி ஊழல் நிறைந்தது- பாஜ., மாநில துணைத்தலைவர்

INDIA கூட்டணி ஊழல் நிறைந்தது என்பதற்கு அந்த எம்.பி.,க்களின் வீடுகளில் நடந்த சோதனைகளே உதாரணம் என, பாஜ., மாநில துணைத்தலைவர் கனகசபாபதி கூறினார்.
திமுக காங்கிரஸ் அங்கம் வகிக்கூடிய INDIA கூட்டணி ஊழல் நிறைந்த கூட்டணி , அதற்கு திமுக , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த சோதனைகளே உதாரணம் என திருப்பூரில் பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி பேட்டி. திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாராளுமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வித்யாலயம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் மேற்பார்வையாளருமான கனகசபாபதி கலந்து கொண்டிருந்தார். கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம் பி யின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 350 கோடி ரொக்கம் கணக்கில் காட்டப்படாத பணமாக கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் , இதேபோல் தமிழகத்தில் கடந்து சில தினங்களுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டதில் 1200 கோடி முறைகேடும் 68 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் , இவைகளே திமுக மற்றும் காங்கிரஸ் ஊழல் நிறைந்த கட்சி என்பதற்கு உதாரணம்.
எனவே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ள INDIA கூட்டணி என்பது ஊழல் நிறைந்த கூட்டணி மற்றும் குடும்பம் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகளுடைய கூட்டணி எனவும் இதனை அப்புறப்படுத்தவும் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தோற்கடிப்பதற்காக பாஜக நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி இருப்பதாகவும் பேட்டி அளித்தார். இந்த கூட்டத்தில் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
