இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை கூட்டம்

இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை கூட்டம்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. 

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணி கட்சிகளின் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி, இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி க.செல்வம் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். கூட்டத்தில், பாசிச மோடி அரசை வீழ்த்துவதற்கு, அகில இந்திய அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தியா கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு திமுக போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கலந்தாலோசனை கூட்டத்தில் எம்எல்ஏ சுந்தர் பேசுகையில், 'நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் வகையில் நாம் பாடுபட வேண்டும். பாசிச மோடி அரசை வீழ்த்துவதற்கு, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். அதற்கு முன்னோட்டமாக, தமிழ்நாடு மற்றும் புதுவை 40 தொகுதிகளில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் அனைவரும் உழைக்க வேண்டும்' என்றார்.

Tags

Next Story