தாராபுரத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

தாராபுரத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

ஆலோசனைக் கூட்டம்

தாராபுரத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவரும் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாதன் தலைமை தாங்கினார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி முன்னிலை வகித்தார்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தாராபுரம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் திமுக ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும் திருப்பூர் மாநகராட்சி 4காம் மண்டல தலைவர் இல.பத்மநாதன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் இந்தியா கூட்டணிக்கு பாடுபட்டு தமிழகத்தில் 39க்கும் 39 வேட்பாளர்களை வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் தாராபுரம் தொகுதி தேர்தல் பார்வையாளர் கோட்டை அப்பாஸ், மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர் முருகானந்தம், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தென்னரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் மின்னல் ஓவியர், கட்சி சார்பற்ற விவசாயிகள் மாநில தலைவர் காளிமுத்து, மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story