இந்தியா‌ கூட்டணி வேட்பாளா்கள் வெல்ல வேண்டும் - துரை வைகோ

இந்தியா‌ கூட்டணி வேட்பாளா்கள் வெல்ல வேண்டும் - துரை வைகோ

பிரச்சாரம்

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியைப்போல், நாடு முழுவதும் நல்லாட்சி மலர ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள் என மதிமுக வேட்பாளா் துரை வைகோ பேசினார்.

திமுக கூட்டணியில் மதிமுக கட்சி சாா்பில் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் துரை வைகோ திருச்சி காந்தி மாா்க்கெட்டில் புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கி வாக்குகள் சேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில் தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவையே திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது. இங்கு நமது முதல்வா் செயல்படுத்தியுள்ள பல திட்டங்களை பிற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றனா். எனவே, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் பாஜகவை தோற்கடிக்கவும் இந்தியா கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

எனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். திமுக கிழக்கு மாநகரச் செயலா், மண்டலத் தலைவா் மு. மதிவாணன், மதிமுக அவைத் தலைவா் ஆடிட்டா் அா்ஜூனராஜ், பொருளாளா் மு. செந்திலதிபன், மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி பொறுப்பாளா் மு. பூமிநாதன், துணைப் பொதுச் செயலா் மருத்துவா் ரொஹையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம், இளைஞா் அணிச் செயலா் ப.த. ஆசைத்தம்பி, மாநில மாணவா் அணிச் செயலா் பால.சசிகுமாா், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story