மாற்றுத்திறனுள்ள மாணவர்களுக்கு இந்திய குடியரசு கட்சியினர் உணவு

மாற்றுத்திறனுள்ள மாணவர்களுக்கு இந்திய குடியரசு கட்சியினர் உணவு
 மாணவர்களுக்கு உணவு
இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகருமான டாக்டர் செ.கு.தமிழரசனின் 71-வது பிறந்த நாள் விழா, விழுப்புரம் மாவட்ட இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி லட்சுமிபுரத்தில் உள்ள வேலா காது கேளாதோர் சிறப்பு மேல்நிலைப்பள்ளி, வேலா மனவ ளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் இருவேல்பட்டு அ.குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் க.மங்காபிள்ளை கலந்துகொண்டு மாற்றுத்திறனுள்ள மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார், இதில் கடலூர் மாவட்ட தலைவர் ஆர்.கதிர்வேல், விழுப்புரம் மாவட்ட அமைப்பு செயலாளர் மருது, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெய்ஸ்டாலின் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story