இந்திய விமானப்படையில் இசை கலைஞர் பணிக்கு ஆட்சேர்ப்பு - ஆட்சியர் தகவல் !!
ஆட்சியர் சாந்தி
இந்திய விமான படையில் இசை கலைஞர் பணிக்கு ஆட்சேர்ப்பு மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தருமபுரி இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு இசை கலைஞர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பேரணி பெங்களூரில் அமைந்துள்ள 7வது ஏர்மேன் தேர்வு மையத்தில் இந்திய இராணுவத்தால் 03.07.2024 முதல் 12.07.2024 வரை நடைப்பெறவுள்ளது. இத்தேர்விற்கு இணையவழியில் 05.06.2024 வரை விண்ணப்பிக்கலாம். அக்னிவீர்வாயு இசை கலைஞர் தேர்வுக்கு 02.01.2004 முதல் 02.07.2007 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார். இத்தேர்வுக்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள இசை கருவிகளில் ஏதேனும் ஒன்றினை வாசிக்கும் திறனும் மற்றும் அவற்றில் முன் அனுபவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும்.ஆர்வமுள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் 04342-296188 மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் அல்லது https://t.ly/kkajW என்ற இணையதள படிவத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை (இசை கலைஞர்) பேரணியில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Next Story