கோவில்பட்டியில் இந்திய செய்தித்தாள் தினம்!

கோவில்பட்டியில் இந்திய செய்தித்தாள் தினம்!

இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிப்பு 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாசகர் வட்டம் சார்பில் இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாசகர் வட்டம் சார்பில் இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் செய்தித்தாள் ஹிக்கிஸ் பெங்கால் கெஜட் 1780ல் ஜனவரி 29ம் தேதி கல்கத்தாவில் வெளியிடப்பட்டது. செய்திதாள்களின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜனவரி 29ம் தேதி இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி வாசகர் வட்டம் சார்பில் புது ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இந்திய செய்தித்தாள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் தலைமை வகித்தார். மேனாள் வேளாண்மை துறை கண்காணிப்பாளர் நடராஜன், பள்ளி தலைமையாசிரியர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவி காவ்யாஸ்ரீ அனைவரையும் வரவேற்றார். ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர் ஆசியாபார்ம்ஸ் பாபு மாணவர்களுக்கு தினசரி செய்தித்தாள்களை வழங்கினார். இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவர் அமர்நாத் நன்றி கூறினார்.

Tags

Next Story