ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் !

பகுஜன் சமாஜ் கட்சி

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடந்தது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி இந்திய குடியரசு கட்சி சார்பில் சேலம் கோட்டை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயசுதா, மகளிர் அணி செயலாளர் சாந்தி, மாநகர தலைவர் சேட்டு, செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கருமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மாநில பொருளாளர் வேலுச்சாமி, துணை செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட அவைத்தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்தும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story