இந்திய மாணவர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

இந்திய மாணவர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

இந்திய மாணவர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

இந்திய மாணவர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

இந்திய மாணவர் சங்கத்தின் ராசிபுரம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் 54 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு ராசிபுரத்தில் ஒன்றிய செயலாளர் தோழர் முஜீப் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு பள்ளிகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்துவது, சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும், இதனை யாராலும் தடுக்க முடியாது என கூறியிருந்தார். இதனை கண்டித்து வருகின்ற ஜன 13ஆம் தேதி ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜனவரி மாத இறுதிக்குள் கிளை மாநாடுகளை நடத்தி முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றபட்டன. கூட்டத்தில் இறுதியாக மாவட்ட தலைவர் தோழர் தங்கராஜ் பங்கேற்றார்.

Tags

Next Story