இந்திய அணி சாதனை: ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்திய அணி சாதனை: ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
X

வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு 

சர்வதேச எறிபந்து போட்டியில் சாதனை படைத்த அணிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவிலான எறிந்து போட்டி நேபாளத்தில் கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் நடைபெற்றது.பல்வேறு நாடுகளை சேர்ந்த 25 அணிகள் பங்கேற்ற இதில் இந்திய இலங்கை அணி இறுதி போட்டியில் விளையாடின.

இப்போட்டியில் அதிக புள்ளிகள் பெற்று ஈரோடு மாவட்டம் குருமந்தூரை சேர்ந்த கேப்டன் அர்ச்சனா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. இதனை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய வீராங்கனைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் சார்பில் ஈரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வீராங்கனைகளுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர்.

எறிபந்து போட்டி பயிற்சி செய்வதற்கு அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story