இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம் நடைபெற்றது.


தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம் நடைபெற்றது.

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநில வா்த்தக அணி சாா்பில் வணிகா் தினத்தை முன்னிட்டு தென்மண்டல பயிலரங்கம் நடைபெற்றது. மாநில வா்த்தக அணித் தலைவா் எஸ். செய்யது சுலைமான் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ், நெல்லை மாவட்டச் செயலா் பாட்டப்பத்து முஹம்மது அலி, ராமநாதபுரம் மாவட்ட பொருளாளா் முஹம்மது யூனுஸ் ஆலிம், தென்காசி நகரத் தலைவா் என். எம். அபுபக்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உலமாக்கள் அணி மாவட்ட துணை அமைப்பாளா் முஹம்மது இப்ராஹிம் ஆலிம் கிராஅத் ஓதினாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன், மாநிலப் பொதுச்செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கா் ஆகியோா் பேசினா். மாநில வா்த்தக அணி துணைத் தலைவா் இனாயத்துல்லா, மாநில வா்த்தக அணி செயலா் ஆலம்கான், முஸ்லிம் யூத் லீக் மாநில ஒருங்கிணைப்பாளா் நயினாா் முஹம்மது கடாபி, தென்காசி மாவட்ட முதன்மை துணைத் தலைவா் புளியங்குடி அப்துல் வஹாப், முதலியாா்பட்டி கே.எம். அப்துல் காதா், விவசாய அணி மாநிலச் செயலா் முஹம்மது அலி உள்ளிட்டோா் பயிலரங்கத்தில் பங்கேற்றனா்.

தமிழ்நாட்டுக்கு வரும் வா்த்தக பொருள்களுக்கு ஒருமுறை மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூல் செய்ய வேண்டும். அரிசி பால் போன்ற உணவுப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவேண்டும். வட்டம் தோறும் கணக்கு மேற்பாா்வைக்குழு ஏற்படுத்தி வா்த்தகா்கள் அரசு மூலமாக சந்திக்கும் பிரச்னைகளுக்கு சுமூகத் தீா்வு காண்பது, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வா்த்தகா்களுடன் கலந்துரையாடல் மூலம் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவது. பாவூா்சத்திரம், ஆலங்குளம் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story