இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி: முத்தரசன்

இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி: முத்தரசன்

முத்தரசன் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி மோடியின் மூன்றாவது பிரதமர் கனவு கனவாகவே போகும் சத்தியில் முத்தரசன் பேட்டி நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராசாவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சத்தி பஸ் நிலையத்தில்,

இருந்து சுமார் 1000 தொண்டர்களுடன் ஆற்றுப்பாலம், மணிக்கூண்டு, பெரிய பள்ளிவாசல் வீதி வழியாக வடக்குப்பேட்டையில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர், செய்தியாளர் சந்திப்பின் போது முத்தரசன் பேசுகையில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மோடியின்,

மூன்றாவது முறை பிரதமர் கனவு கனவாகவே போவோம், பாமக, தேமுதிக, அதிமுக ள்கட்சி செலவு சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும். அண்ணாமலை சொல்கிறார் அதிமுக இருக்காது என்று, என்று சொல்கிறார் திமுக இருக்காது காங்கிரஸ் இருக்காது என்று இதையெல்லாம் தடுத்து நிறுத்த இந்தக் கட்சியினர் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்,

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பல வாரங்கள் ஆகிவிட்டன. காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வெளியிட்டுள்ளதில் இருந்து படித்துப் பார்த்து அதிலிருந்து அங்கொன்றுமாக எடுத்து பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2014ல் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வர வைக்கப்படும் என மோடி சொல்லியிருந்தார். இந்த தேர்தல் அறிக்கையில் 10 லட்சம் வர வைக்கப்பட்டுவிட்டது 5 லட்சம் வைக்கப்படும் என சொல்லி இருக்கலாம் அதை சொல்லவில்லை, தமிழக மீனவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என சொல்லியிருந்தார். ஆனால் இன்று வரை இலங்கை கடற்படையாள் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இந்திய கூட்டணி தேர்தல் அறிக்கையில்,

நாங்கள் வெற்றி பெற்றால் வறுமைக் கூட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்படும், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும், ஒற்றை பைசா கூட கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை, கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது, கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.

Tags

Next Story